FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடி வரும் தவெக அரசுக்கு கண்டனம்: இபிஎஸ்

மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை மலிவு விலையில் விற்க தவெக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியது குறித்து...

மருந்து விலையைக் குறைக்க வலியுறுத்தல் - பிரதிப் படம்
பகிர்:

ஏழை, எளிய மக்களுக்காக மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை மலிவு விலையில் விற்பனை செய்ய தவெக அரசு முன்வருமா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், 2014-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம் 'அம்மா மருந்தகங்களை' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.

தொடர்ந்து எனது தலைமையிலான அதிமுக அரசு, தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை விரிவாக்கம் செய்து, நோய்வாய்ப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிர்களைக் காத்தது.

Advertisement

Advertisement

2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 'முதல்வர் மருந்தகம்' என்று பெயரை மாற்றி தனியாருக்கு வழங்கி, அம்மா மருந்தகங்களின் செயல்பாட்டை முடக்கியது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இம்மருந்தகங்களை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில், தற்போதும் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களின் உயிர் காக்கும் மருந்துகளின் விலையில், நிர்ணயிக்கப்பட்ட 30 சதவிகித லாப வரம்பையும் தாண்டி விலை நிர்ணயம் செய்து விற்பதாக அகில இந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பு (All India Drug Action Netowrk) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வது மற்றும் இதர மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்த வழக்கு அக். 27-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி, மருத்துவமனைகளில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது குறித்த மத்திய, மாநில அரசுகளின் நிலையை தெளிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் ரூ. 10-ஐ அரசே உயர்த்தி வசூலிப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,200 கோடி முதல் ரூ. 1,600 கோடி வருமானம் ஈட்டும் என்று பெருமை பேசும் விஜய்யின் அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நோய்ப் பிணியைத் தீர்க்க, அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்த, அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து, தமிழக மக்களின் உயிர் காக்க முன்வருமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

AIADMK Secretary Edappadi Palaniswami urges the TVK government to sell medicines and tablets at affordable prices in pharmacies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments