தீபாவளி பட்டாசு Center-Center-Chennai
இந்தியா

தில்லியில் பட்டாசுக்குத் தடை; ஆனால், மருத்துவமனையில் தீக்காயத்துடன் குவிந்த மக்கள்!

தில்லியில் பட்டாசுக்கு தடை; ஆனால், மருத்துவமனையில் தீக்காயத்துடன் குவிந்த மக்கள்!

DIN

காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், தில்லியில், பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளி இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத்துடன் குவிந்தது, தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது என்பது தெளிவானது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 48 பேர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 27 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை ஒரே நாளில் சப்தர்ஜங் மருத்துவமனையில் மட்டும் 117 பேர் பட்டாசு வெடித்தபோது நேரிட்ட தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இவர்களில் 89 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு வந்தவர்களில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய நாள்களிலும், பட்டாசு வெடித்ததால் நேரிட்ட தீக்காயங்களுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வந்ததாகவும், சின்ன சின்ன தீக்காயங்களுக்கு மருத்துவ மையங்களிலேயே பலரும் சிகிச்சை பெற்று சென்றதாகவும் கூறப்படுகிறது.

பட்டாசு விற்பனை செய்ய, வெடிக்க தடை விதிக்கப்பட்ட தில்லியில் இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தது, அங்கு எந்த அளவில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதையே காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT