நிதின் குமார் சிங் 
இந்தியா

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை!

மும்பையில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

DIN

மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையில் மேற்கு புறநகரான கோரேகானில் உள்ள வீட்டில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சின்னத்திரை நடிகரான நிதின் குமார் சிங் புதன்கிழமை யசோதம் பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

நிதின் குமார் சிங் கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், அவரால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தமுடியாததால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

நிதின் குமாரின் மனைவி அவரது மகளை பூங்காவிற்கு அழைத்துச் சென்றிருந்தபோது அவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூங்காவில் இருந்து வந்த அவரின் மனைவி வீடு பூட்டிருப்பதைக்கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட நிதின் குமார் சிங் ஹிந்தியில் வெளியான ‘சிச்சோர்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த, அதேவேளையில் ‘எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் நடித்து பிரபலமான கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT