ராகுல் - கோப்பிலிருந்து 
இந்தியா

நாட்டின் நலனுக்காக அல்ல, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம்: சம்பல் குறித்து ராகுல்

நாட்டின் நலனுக்காக அல்லாமல், ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக சம்பல் குறித்து ராகுல் கருத்து

DIN

புது தில்லி: மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரத்தை மாநிலங்களில் ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது, மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல என்று சம்பல் மோதல் குறித்து ராகுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சம்பலில் உள்ள முகலாயர் கால மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட ஆய்வை எதிர்த்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மூன்று பேர் பலியாகினர். பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் இன்று காலை பலியானார்.

இந்த நிலையில்தான், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் நேரிட்டிருக்கும் மோதல் விவகாரத்தில், மாநில அரசின் ஒருபக்க சார்பும், அவசர நடவடிக்கைகளும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட அல்லது மாநில நிர்வாகம், அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் உணர்வுப்பூர்வமாக சிந்திக்காமல், நடவடிக்கையை மேற்கொண்டு, ஏற்கனவே இருக்கும் சூழலை மேலும் சீர்குலைத்து, மோதலை உண்டாக்கி, மக்கள் உயிரிழக்க வழிவகுத்துள்ளது. இதற்கு பாஜக அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள ஹிந்து-முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவையும் பாகுபாட்டையும் உருவாக்கவே பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால், மாநிலத்தின் அல்லது நாட்டின் நலனுக்கோ அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT