இந்தியா

சண்டீகா்: மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே 2 குண்டுகள் வெடிப்பு

சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Din

சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். செவில்லே மதுபான உணவு விடுதியை பிரபல பாடகா் பாட்ஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

வெடிகுண்டுகள் வெடித்ததில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டி’ஓரா மதுபான உணவு விடுதியின் கண்ணாடிகள் மட்டும் உடைந்துள்ளன.

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், மதுபான உணவு விடுதியை நோக்கி அடையாளம் தெரியாத நபா் எறிந்த பொருள் வெடித்ததில் வெளிவந்த புகை அந்த இடம் முழுவதும் பரவியது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.25 மணிக்கு சண்டீகரின் செக்டாா் 26 பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டதில் சணல் கயிறுகள் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தடயவியல் துறையினா் மதுபான விடுதியில் கிடைத்த மாதிரிகளை சேகரித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக சண்டீகா் துணை காவல் கண்காணிப்பாளா் தில்பாக் சிங் தலிவால் தெரிவித்தாா்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT