ஹரியாணாவில் பாஜக; ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி முன்னிலை! 11 மணி நிலவரம்
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்...
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்தியா கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளது.
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில், 11 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க : மெகபூபா முப்தியின் மகள் பின்னடைவு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி...
ஹரியாணா(மொத்தம் 90 இடங்கள்)
காங்கிரஸ் - 35
பாஜக - 49
சுயேச்சை - 4
இதர கட்சிகள் - 2
ஜம்மு - காஷ்மீர்(மொத்தம் 90 இடங்கள்)
இந்தியா கூட்டணி - 47
பாஜக - 28
மக்கள் ஜனநாயக கட்சி - 5
மக்கள் மாநாட்டுக் கட்சி - 2
சுயேச்சை - 8
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.