பாஜகவுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளவர்! அமித் ஷாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
அமைச்சர் அமித் ஷாவின் 60-ஆவது பிறந்தநாள் இன்று...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது 60-ஆவது பிறந்தநாளை இன்று(அக். 22) கொண்டாடுகிறார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அமித் ஷா கடுமையாக உழைக்கும் ஒரு தலைவர். பாஜகவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளவர்.
நிர்வாக பொறுப்புக்கு தலைமை வகிப்பதில் அமித் ஷா தன்னிகரற்றவராவார். அகண்ட பாரதம் கனவை நனவாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவபவர். இந்நேரத்தில் அவர் நெடுநாள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.