முகப்பு
இந்தியா

மணிப்பூரில் வன்முறை: 40 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 6:29 PM
- PTI
பகிர்:

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி -குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை சீராகி வந்த நிலையில், தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. ட்ரோன், வெடிமருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் மூலமாக ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

Advertisement

இதனைக் கண்டித்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று நடைபெற்ற பேரணியில் மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மைகளை எரித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் இன்று(செப். 10) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 5 நாள்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாள்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரு நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.