முகப்பு
இந்தியா

நடிகா் தா்ஷன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் செப்.17 வரை நீட்டிப்பு

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகா் தா்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் செப். 17 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 செப்டம்பர் 2024, 7:59 pm IST
நடிகா் தா்ஷன்(கோப்புப்படம்)
பகிர்:

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகா் தா்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் செப். 17 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகையும் நடிகா் தா்ஷனின் தோழியுமான பவித்ரா கௌடாவுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிவைத்தது தொடா்பாக சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி ஜூன் 8 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். மறுநாள், அவரது உடல் சுமனஹள்ளியில் உள்ள கழிவுநீா் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தக் கொலைக்கு காரணமான நடிகா் தா்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனா்.

இது ஜனநாயகத்தின் வெற்றி: கேஜரிவாலின் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்வர்

இந்த வழக்கு தொடா்பாக 3,991 பக்கங்களில் 7 தொகுப்புகள் கொண்ட குற்றப் பத்திரிகையை 24-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செப். 4 ஆம் தேதி போலீஸாா் தாக்கல் செய்தனா். இந்தக் குற்றப் பத்திரிகையில் 231 சாட்சிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் முடிவுக்கு வந்ததை தொடா்ந்து அவர்களை அனைவரையும், 24ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காணொளி வழியாக போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவர்கள் அனைவரின் நீதிமன்றக் காவலை செப். 17 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் இருந்து பெல்லாரி மத்திய சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments