முகப்பு
இந்தியா

மிஸ் இந்தியா பட்டம் வென்ற 19 வயது இளம்பெண்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா வென்றுள்ளார்.

Updated On : 23 செப்டம்பர், 2024 at 7:46 AM
ரியா சிங்கா
பகிர்:

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகி பட்டத்தை குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா வென்றுள்ளார்.

நடப்பாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. 51 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா மகுடம் சூட்டினார்.

இலங்கை அதிபர் அநுரகுமாரவுக்கு காங்கிரஸ் வாழ்த்து!

அவருக்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா மகுடத்தை அணிவித்தார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், ஜாவி வெர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி குறித்து ரியா சிங்ஹா கூறுகையில், நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளேன்.

மேலும் முந்தைய வெற்றியாளர்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்ஹா நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →