முகப்பு
இந்தியா

நாடு வளர்ச்சியைக் கண்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

Updated On : 1 பிப்ரவரி 2024, 12:16 pm IST
நாடு வளர்ச்சியைக் கண்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
பகிர்:

மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செயல்படுகின்றன. 

Advertisement

Advertisement

பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. எங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவர் என்று நம்பிக்கை உள்ளது. 

நாட்டில் 4 பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் ஒழிப்பையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம். வீடுகளுக்குக் குடிநீர் அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  

சமூகநீதி என்பதைத் திட்டங்களுக்கான மந்திரமாகப் பயன்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments