FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜனவரி 2024, 2:29 pm IST
பகிர்:

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிக பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ மீறிய காரணத்திற்காக இந்தியாவில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தியாவில் கடந்த நவம்பர் 1 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 71,96,000 கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதில், 19,54,000 கணக்குகள் எவ்வித புகார்களும் பெறுவதற்கு முன்னதாகவே கொள்கை மீறல் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8,841 பணமோசடி புகார்களை வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் பயனர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணமோசடி செய்யும் நடைமுறை அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது வாட்ஸ்ஆப் பேக்கப்பை கூகுள் டிரைவில் இலவசமாக பிரதி எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments