FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாடு முழுவதும் அறிவியல் மையம், அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்காத்தாவில்  அமைந்துள்ள தலைமை அறிவியல் மையத்திற்கு இ-மெயில் மூலம் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

7 பிப்ரவரி 2024, 8:53 pm
பகிர்:

கொல்காத்தாவில்  அமைந்துள்ள தலைமை அறிவியல் மையத்திற்கு இ-மெயில் மூலம் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள தேசிய அருங்காட்சியகம், அறிவியல் மையங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், மும்பையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம், வோர்லியில் உள்ள நேரு அறிவியல் மையம் உள்ளிட்டவற்றுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு நடத்தி, அதுபோன்ற வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

மும்பையில் மட்டும் எட்டு இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில்  ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய அருங்காசியகம் அறிவியல் மையத்தின் தலைமை அலுவலகத்திற்கும் பெங்களூருவில்  உள்ள அறிவியல் மைய அலுவலகத்திற்கும் பொதுவாக வந்த ஒரு ஈமெயிலில் இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

 இதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசு அறிவியல் மையங்களில் இன்று வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அதிநவீன கருவிகளுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு பகுதியாக தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக அறிவியல் மையத்தில் உள்ளே பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை இன்று முழுவதும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மையத்தில் கருவிகள் உள்ள அறைகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.