FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

அடுக்குமாடி குடியிருப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.261.85 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.261.85 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

12 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.261.85 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.355 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டு அங்கு குடிநீா் விநியோகம், கழிவுநீா் மேலாண்மை, சாலை வசதி, மழைநீா் வடிகால் வசதி, மின்சாதனங்கள் வசதி, தெருவிளக்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் ரூ.47.81 கோடிக்கு 28,375 குடியிருப்புகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.

செம்மஞ்சேரி குடியிருப்பில் ரூ.70 கோடியில் 6,764 குடியிருப்புகளிலும், சென்னை மற்றும் பிற மாவட்ட 74,306 குடியிருப்புகளில் ரூ.144.04 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் என மொத்தம் ரூ.261.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கண்ணகி நகரில் மேம்பாட்டுப் பணி: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சென்னையில் கண்ணகி நகரில் 6,508 குடியிருப்புகளில் ரூ.49.29 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியிருப்புகளில் மேற்கூரை சீரமைப்பு, பூச்சு பணிகள், மேற்கூரையில் தரைத்தள ஓடுகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.