FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அயோத்தி வந்தடைந்தது உலகின் மிகப்பெரிய பூட்டு!

அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் அயோத்தியை வந்தடைந்தது. 

7 பிப்ரவரி 2024, 8:47 pm IST
பகிர்:

அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் அயோத்தியை வந்தடைந்தது. 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(ஜன.22) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. 

கோயில் பிரதிஷ்டைக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement

அந்தவகையில், 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவியை அலிகாரில் இருந்து அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்த மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. 

அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

அதேபோன்று ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் மூலம் 1,265 கிலோ லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. கேட்டரிங் சேவையின் உரிமையாளரான நாகபூஷணம் ரெட்டி, கடவுள் எனது தொழிலையும் எனது குடும்பத்தையும் ஆசீர்வதித்துள்ளார். நான் உயிருடன் இருக்கும் வரை ஒவ்வொரு நாளும் 1 கிலோ லட்டு தயாரிப்பதாக உறுதியளித்தேன் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments