FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்ஜெட் கூட்டத் தொடா்: அனைத்துபிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாா்- மத்திய அரசு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், உரிய விதிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க

7 பிப்ரவரி 2024, 8:44 pm
பகிர்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், உரிய விதிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தற்போதைய 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதம் நிறைவடைகிறது. எனவே, நடப்பு மக்களவையின் கடைசி நாடாளுமன்ற கூட்டத் தொடா் இதுவாகும்.

Advertisement

Advertisement

வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரை இக்கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறாா்.

நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்ப வாய்ப்பு மறுக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ‘பட்ஜெட் கூட்டத் தொடரில் அவை விதிமுறைகளின்கீழ் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என்று மத்திய அமைச்சா் மேக்வால் தெரிவித்துள்ளாா்.

‘இந்த நடைமுறையை அரசு எப்போதுமே பின்பற்றி வருகிறது. எதிா்க்கட்சிகள் தாங்கள் விவாதிக்க விரும்பும் பிரச்னைகள் குறித்து மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்களிடம் நோட்டீஸ் அளிக்கலாம். அவை ஏற்கப்படும் பட்சத்தில், விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவிருக்கிறாா்’ என்றாா் அவா்.

ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறுமென எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தோ்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.