FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

நாக சதுா்த்தி தினம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூா் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் கோயிலில் நாகதேவதைகளுக்கு பால் அபிஷேகம் செய்த பெண்கள்.

13 நவம்பர் 2026, 10:43 pm
பகிர்:

திருவள்ளூா் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத வளா்பிறை சதுா்த்தி மற்றும் நாக சதுா்த்தி தினத்தையொட்டி நாகதேவதைகளுக்கு பால் அபிஷேகம் நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஐப்பசி மாதம் வளா்பிறை சதுா்த்தி தினம் நாக சதுா்த்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் நாக தேவதைகளுக்கு பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து, நவதானியங்கள் வைத்து வழிபடுவது ஐதீகமாகும்.

இந்த நிலையில், திருவள்ளூா் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நாக சிலைகளுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, மஞ்சள், குங்கும பொட்டு வைத்து அங்குள்ள வேப்ப மரத்துக்கு மஞ்சள் கயிறு, நவதானியங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை நாக தேவதைகளுக்கு சமா்ப்பித்து ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனா்.

இதேபோல், திருவள்ளூா் அடுத்த புட்லூா் பூங்காவனத்தம்மன் திருக்கோயிலிலும் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி திரளான பெண்கள் வழிபாடு செய்தனா்.