வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், ஓவைசி வழக்கு!
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்த நிலையில், காங்கிரஸும் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளது.
தனியார் ஏஐ முதலீட்டில் 4.8 டிரில்லியன் டாலரை எட்டும் இந்தியா!
அக்கட்சி சார்பில் எம்.பி. முகமது ஜாவேத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேபோல் இந்த மஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது என்று இருவரும் தனித்தனியே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
விரைவிலேயே இம்மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.