கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

மகாராஷ்டிரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 11 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.82 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 11 மாவோயிஸ்டுகள் இன்று (டிச. 10) காவல் துறை உயர் அதிகாரி ராஷ்மி சுக்லா முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் குழுவில் 88 வழக்குகளில் தொடர்புடைய ரமேஷ் (எ) பஜூ குட்டி லெகாமி என்பவரும் சரணடைந்துள்ளார். இவரைக் கைது செய்வதற்கு, காவல் துறையினர் ரூ.16 லட்சம் சன்மானம் அறிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் தங்களது ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இத்துடன், சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசின் திட்டங்களின் மூலம் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் அதிகமுள்ளதாகக் கருதப்படும் கட்சிரோலி மாவட்டத்தில், இதுவரை 783 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திருப்பதி லட்டிலும் ஊழல்; பட்டிலும் ஊழலா? 10 ஆண்டுகளாக!!

Eleven Maoists, who were wanted with a bounty on their head in Maharashtra's Gadchiroli district, have surrendered to security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT