FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!

சரயு நதியில் அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் ஜலசமாதி.

Updated On : 14 பிப்ரவரி 2025, 10:08 am IST
சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்
பகிர்:

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.

85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அயோத்தியில் உள்ள இல்லத்தில் மகந்த் சத்யேந்திர தாஸின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சரயு நதியில் விடப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நதியின் ஆழமான பகுதிக்கு சத்யேந்திர தாஸின் உடலை கொண்டுசென்ற அர்ச்சகர்கள் ஜலசமாதி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments