பாஜகவினர் கோமாளிகளாக மாறிவருகின்றனர்: ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்!
ஆம் ஆத்மியை விமர்சனம் செய்ததைப் பற்றி..
தில்லி மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை கேள்வி கேட்டால் பாஜகவைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சஞ்சய் சிங் கூறியதாவது,
Advertisement
Advertisement
மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை இலவசப் பேருந்து, புதிய சாலைகள், மூன்று லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைத்துக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவாலை கேள்வி கேட்டால் பாஜகவை பார்த்து மக்கள் சிரிப்பார்கள். பாஜகவினர் கோமாளிகளாக மாறிவருகின்றனர். எனவே அவர்களின் அறிக்கைகளை பெரியதளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இரண்டு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுதருவதாகவும, விவசாயிகளின் பயிர்களின் விலையை இரட்டிப்பாக்குவது, கருப்புப் பணத்தை மீட்பது என்று அடுக்கடுக்காக பொய்களைச் சொன்னது பாஜகதான்.
ஆம் ஆத்மி கட்சி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை முன்னெடுத்துப் போராடி வருகின்றது ஆனால் பாஜக அவற்றுக்குத் தொடர்ச்சியாகத் தடையை ஏற்படுத்திவருகின்றது.
புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் செழிப்பையும், முன்னேற்றத்தையும் கொண்டுவந்து நம் நாடு வெறுப்பை விட்டு, அன்பின் அடிப்படையில் முன்னேறட்டும் என்று அவர் கூறினார்.