நடிகர் சைஃப் அலி கான் தனது மனைவி கரீனா கபூர்மற்றும் இரண்டு மகன்களுடன்.. | தாக்கியதாகக் கூறப்படும் நபரின் சிசிடிவி காட்சி. 
இந்தியா

சைஃப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்ட குற்றவாளி! 20 தனிப்படைகள் அமைப்பு!

சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

DIN

நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில், அவரி குற்றவாளி ரூ.1 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைத்துள்ளது.

சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!

சைஃப் அலிகானுக்கு கழுத்து உள்பட 6 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு லீலாவதி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில், “கொள்ளையடிக்க வந்தவர், அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது உடைகளை மாற்றியிருக்கலாம். அவரைப் பிடிக்க 20 தனிப்படைக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியுள்ளோம். மேலும், குற்றவாளி மீது முன்பு ஏதாவது குற்றப் பதிவு உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

சைஃப் மற்றும் கரீனா கபூர்-கானின் இளைய மகன் ஜெஹ் ஆகியோரின் அறைக்குள் ஊடுருவிய நபர் முதலில் நுழைந்து, எதிர்கொண்டபோது ரூ.1 கோடி கேட்டுள்ளார். அதன்பின்னர் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார்” என்றனர்.

சயீஃப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT