FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

Updated On : 21 ஜனவரி 2025, 11:20 am IST
கோப்புப்படம் - PTI
பகிர்:

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14-க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் - ஒடிஸா எல்லையில் காரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறையினர் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவலர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதில் மத்திய நக்சல்கள் குழு உறுப்பினரான ஜெயராம் உள்பட 14 -க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாக காரியாபந்த் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரஹேச்சா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் போன்ற தானியங்கி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ் கூறியதாவது:

“அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் துணிச்சலுடன் செயல்பட்டு வருகின்றனர்.

காரியாபந்தில் நக்சல்களை கொன்ற வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நக்சல்வாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments