முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.17ல் தொடக்கம்!

அஸ்ஸாம் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 17ல் தொடங்குவது பற்றி..

Updated On : 23 ஜனவரி 2025, 11:43 am IST
அஸ்ஸாம் சட்டப்பேரவை
பகிர்:

அஸ்ஸாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17 முதல் மார்ச் 25 வரை நடைபெறும் என அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு கோக்ரஜாரில் நடைபெற உள்ளது. அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை ஆற்றுகிறார்.

ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு, மீதமுள்ள கூட்டத்தொடர் பிப்ரவரி 19-ம் தேதி முதல் அஸ்ஸாம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும்.

Advertisement

Advertisement

2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் அஜந்தா நியோக் மார்ச் 10ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரின்போது பல மசோதாக்கள், அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.