முகப்பு
இந்தியா

நாளைமுதல் பட்ஜெட் கூட்டத் தொடர்!!

நிதியாண்டு 2025 - 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது.

Updated On : 30 ஜனவரி 2025, 10:33 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நிதியாண்டு 2025 - 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையில் (பிப். 1) நிதியாண்டு 2025 - 26-க்கான மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, பின்னர் உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும். மாநிலங்களவையில் இந்த விவாதம் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

Advertisement

Advertisement

மாநிலங்களவையில் நடைபெறும் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி பிப்ரவரி 6 ஆம் தேதியில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கட்ட அமர்வுகளாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 27 அமர்வுகள் இடம்பெறுகின்றன. 9 அமர்வுகளைக் கொண்ட முதல் கட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடையும். தொடர்ந்து, இரண்டாவது கட்டம் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதிவரையில் நடைபெறும்.

பண வீக்கம், விலைவாசி உயா்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், வக்ஃப் திருத்த மசோதா, கிராமப்புற மேம்பாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயி - முதியவர்கள் - சிறு தொழில்களுக்கு சலுகைகள் உள்ளிட்டவையும் விவாதிக்கப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.