முகப்பு
இந்தியா

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

நீட் தேர்வில் தோல்வியடைந்து 20 வயது பெண், இன்று ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சத்தில் வேலை பெற்று சாதித்துள்ளார்.

Updated On : 17 ஜூலை 2025, 4:19 pm IST
ரோல்ஸ் ராய்ஸ்
பகிர்:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, நம்பிக்கை, அயராத உழைப்பு இருந்தால் மிகப்பெரிய கனவுகளை எட்டலாம் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் ரிதுபர்னா.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எழுதி டாக்டராக நினைத்த ரிதுபர்னா, அதில் தோல்வியடைந்தபோது துவண்டுபோகவில்லை. பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். ஆனால், அவரது தந்தையின் சொல்படி, பொறியியல் சேர்ந்து படித்தார்.

Advertisement

Advertisement

இன்று பிரிட்டனில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இளம் வயதில் பணியில் சேர்ந்திருக்கும் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு, விவசாயத் துறைக்குத் தேவையான ரோபோடிக் இயந்திரங்களை தயாரித்து சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றார்.

படிக்கும்போதே, தன்னுடைய திறமையால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ஷிப் கிடைத்தது. தற்போது அது பணி வாய்ப்பாக மாறியிருக்கிறது.

2025, ஜனவரி முதல், வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார். நள்ளிரவில், பணியாற்றத் தொடங்கி, காலை 6 மணி வரை வேலை செய்வாராம். பிறகு, பகலில் தன்னுடைய கல்லூரி படிப்புகளை கவனிப்பாராம். ஏழாவது பருவத் தேர்வு முடிந்ததும், அவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் சென்று, ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக சேரவிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவரது ஆண்டு வருவாய் ரூ.39.6 லட்சமாக இருந்த நிலையில், அவரது அயராத உழைப்பு மற்றும் திறமையைப் பார்த்த நிறுவனம் சம்பளத்தை ரூ.72.3 லட்சமாக உயர்த்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments