ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களூரிலுள்ள சின்னசாமி திடலில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது தலைமையில் இன்று (ஜூன் 4) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அம்மாநில சட்டப்பேரவையிலிருந்து துவங்கி சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியும் நடைபெற்றது.
இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலின் அருகில் திரண்டனர். இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில், பெரும்பாலானோர் இளைஞர்கள் எனக் கூறப்படும் நிலையில்; பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.