முகப்பு
இந்தியா

வெளிவந்த ரூ. 230 கோடி மோசடி! 50,000 அரசு ஊழியர்களின் ஊதியம் எங்கே? அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மாநில அரசு தகவல்

Updated On : 6 ஜூன் 2025, 2:45 pm IST
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் என்றால், அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவைகூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியமாக (ரூ. 230 கோடி) வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது.

Advertisement

Advertisement

இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? (Ghost Employees)

ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.

ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மே 23 ஆம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.

உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களைச் சேர்த்து, பொது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.