பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமருக்கு துணிவில்லை! காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்பட, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுதான் வழி என்று காங்கிரஸ் கருத்து
பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி துணிவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள ஒவ்வோர் அரசியல் தலைவரும் சுதந்திரமாக பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொள்கின்றனர். ஆனால், எங்களுக்கு 11 ஆண்டுகளாக ஒன்றுகூட இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு தேர்தல் பிரசாரத்தில், எழுதி இயக்கப்பட்ட ஓர் ஊடக உரையாடலைத்தான் மேற்கொண்டார். அதன்போது, அவர் உயிரியல் அல்லாதவர் என்றுகூறி, பிரபலமாகவும் முயற்சித்தார்.
Advertisement
Advertisement
இருப்பினும், அவர் ஒருபோதும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த துணியவில்லை. இது அவரது முன்னோடிகள் அனைவரிடத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்பட, பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுதான் வழி என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.