FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம்: சஜ்ஜன் ஜிண்டால்

இந்தியாவின் களச் சூழல் குறித்து எலான் மஸ்குக்கு தெரியாது என்று தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் கூறினார்.

Updated On : 7 மார்ச் 2025, 2:11 pm IST
பகிர்:

இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா கார்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக இந்தியாவில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

எர்ன்ஸ்ட் அன்ட் யங் தொழில்முனைவோர் விருதுகளில் பங்கேற்ற சஜ்ஜன் ஜிண்டால் பேசியதாவது, ``டெஸ்லா நிறுவனர் அறிவாளிதான்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக, அவர் இந்தியச் சந்தையில் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் களச் சூழல் மற்றும் இந்தியாவின் தேவை குறித்து தெரியாது.

Advertisement

Advertisement

நாங்கள் இங்கேயே இருக்கிறோம். மஹிந்திரா, டாடா செய்யக் கூடியதை எலான் மஸ்க்கால் செய்ய முடியாது. அது சாத்தியமுமில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிழலிருக்கும் அவரால் நினைத்ததை செய்ய முடியும். ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ராக்கெட்கூட அவர் செலுத்தலாம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments