நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் தொடர்பாக...
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தர்மேந்திர பிரதான், சர்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.
இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!
இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணி எம்.பி.க்கள் கனிமொழி, ஆ. ராசா, டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.