FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்

வரலாற்றில் முதல்முறையாக 59 தொகுதிகளில் திமுக கூட்டணி மூன்றாவது இடத்துக்குப் போனதாக அமைச்சர் ஷாஜகான் கூறியது குறித்து...

14 செப்டம்பர் 2026, 9:23 am IST
ஆ. ராசா | அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக திமுக கூட்டணி மூன்றாவது இடத்துக்குப் போனதாக அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது, "திமுகவின் தலைமை நிர்வாகத்தில் உள்ள நிர்வாகிகள், தவெக அரசை நோக்கி கடுஞ்சொற்களாலும் தரந்தாழ்ந்த சொற்களாலும் வசைபாடி வருவது வழக்கமாயிருக்கிறது. இதன் உச்சமாக ஆ. ராசா, சேகர்பாபு உள்பட திமுகவின் பல்வேறு நிர்வாகிகள் பேசுவது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு அரசியல் எதை நோக்கிப் போகிறது? அரசியல் ரீதியான விமர்சனங்களெல்லாம் சென்று, பெண்களையும் குடும்பத்தினரையும் இழுத்து வசைபாடுகின்றனர்.

Advertisement

Advertisement

இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வுகூட இல்லாமல், இவர்கள் பேசுவதைப் பார்க்கும்போது அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என்ற பதற்றத்தில் பேசுகிறார்களோ என்று தெரிகிறது.

ஏனெனில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 10 மாவட்டங்களில் திமுக கூட்டணி பூஜ்ஜியமாக உள்ளது. திமுக பார்க்காத தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை என எப்போதும் சொல்வார்கள்.

ஆனால், இந்தத் தேர்தலில் 59 தொகுதிகளில் திமுக கூட்டணி மூன்றாவது இடத்துக்குப் போயிருப்பது வரலாற்றில் முதல்முறை. அதுதான் அவர்களை நிலைதடுமாற வைத்துள்ளது. அதனால்தான் இதுபோன்ற தரந்தாழ்ந்த சொற்களை அவர்கள் பேசுகின்றனர். இது திமுகவுக்கு எந்தவகையிலும் பயன் தராது. இவ்வாறு பேசுவதால் தனக்குத் தானே குழிதோண்டிக் கொள்வதாய்த்தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.

summary

DMK alliance in third place for the first time in history, says Minister Shajahan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments