FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வரலாற்றில் முதல்முறையாக இடைவேளை இன்றி 9.43 மணி நேரம் நடந்த பேரவை

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அதிகபட்சமாக 9.43 மணி நேரம் நடைபெற்றுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 4:53 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக வரலாற்றில் முதல்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 25) எவ்வித இடைவேளையும் இன்றி, சட்டப்பேரவை நடவடிக்கைகள் அதிகபட்சமாக 9.43 மணி நேரம் நடைபெற்றுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை கடந்த ஆக. 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசியதாவது:

தமிழக வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆக. 25-ஆம் தேதி அதிபட்ச நேரமாக 9 மணி 43 நிமிஷங்கள் இவ்வித இடைவேளையும் இன்றி, பேரவை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இதற்கு முந்தைய காலங்களில், இதைவிட கூடுதல் நேரம் பேரவை நடைபெற்றிருந்தாலும், பேரவை நடவடிக்கைகளுக்கு இடையே இடைவேளைகள் விடப்பட்டுள்ளன. ஆனால், ஆக. 25-ஆம் தேதி எவ்வித இடைவேளைகளும் விடப்படாமல், அதிகபட்ச நேரம் பேரவை நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்றது என்று அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments