ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!
ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பற்றி...
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர்கள் செங்கோட்டையன் ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டு முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.
மானிய கோரிக்கை விவாதத்தைக் கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், நேற்று முன்தினம் (ஆக. 25) போலவே சட்டப் பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.
எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது.
இதுவரை இல்லாத உச்சமாக நேற்றுமுன்தினம் (ஆக. 25) காலை 9.30 மணிக்கு தொடங்கிய அவை இரவு 7.13 மணிவரை நீடித்தது. அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் நடைபெற்றன.
தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாக கருதப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக இன்று (ஆக. 27) மாலை 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது. சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத வகையில், இன்று காலை 9.30 முதல் இரவு 7.20 வரை சரியாக 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது.
இதனால், நாளை (ஆக. 28) நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய 3 துறைகளின் அமைச்சர்களும் பதிலுரை வழங்குவார்கள். மேலும், நாளைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
In the history of the Tamil Nadu Legislative Assembly, the House has functioned continuously for about 10 hours in a single day—an unprecedented duration.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.