FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் ஒரே நாளில் 700 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

23 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
மாநகரில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
பகிர்:

கோவை மாநகராட்சி சாா்பில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நடப்பு மாதம் வரை 8,000 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 36, 37, 38 ஆகிய வாா்டுகள், கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 8, 54 ஆகிய வாா்டுகளில் 700 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments