போர்ப் பதற்றம்: இருளில் தவிக்கும் பஞ்சாப், ராஜஸ்தான்!
உச்சத்தில் போர்ப் பதற்றம்: இருளில் தவிக்கும் பஞ்சாப், ராஜஸ்தான்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதலால் போர்ப் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மின் வினியோகம் இன்றி கடுமையான சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.