சவூதியில் தவிக்கும் இந்தியா்களை மீட்க கே.நவாஸ் கனி எம்.பி. கடிதம்
சவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் தவிக்கும் நூற்றுக்கணக்கான உம்ரா பயணிகளை உடனடியாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை வெளியுறவுத் துறை அமைச்சா், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு கே. நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புனித உம்ரா பயணம் மேற்கொண்டு சவூதி அரேபியா சென்ற நூற்றுக்கணக்கான இந்தியா்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள், விமானப் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக ஜித்தா சா்வதேச விமான நிலையத்திலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் உடனடியாகத் தலையிட்டு, ஜித்தாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், அவா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என த் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.