சவூதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
சவூதி அரேபியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பது தொடர்பாக...
வாஷிங்டன்: வாஷிங்டன்: சவூதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 லைட்னிங் 2 போர் விமானங்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை விற்பனை செய்வதற்கு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ விற்பனைக்கு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை, வியாழக்கிழமை அதிகாராப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் துறை திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாத்தியமான வெளிநாட்டு ராணுவ விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாக விளங்கும், நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம், முன்மொழியப்பட்ட இந்த விற்பனை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
இந்த பிரமாண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட விற்பனை, சவூதி அரேபியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலமும், அமெரிக்கப் படைகள், பிற பிராந்திய மற்றும் நேட்டோ படைகளுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலமும், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுக்கும் அதன் திறனை மேம்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த முன்மொழியப்பட்ட விற்பனை பாதுகாப்பு ஒப்பந்தத்தில், வழக்கமான முறையில் புறப்பட்டு தரையிறங்கும் திறன் கொண்ட 48 எஃப்-35 விமானங்கள் மற்றும் 49 பிராட் மற்றும் விட்னி எஃப்135-பிடபுள்யு-100 என்ஜின்கள் வழங்கப்பட உள்ளன. இதில், 48 என்ஜின்கள் பொருத்தப்பட்டும், ஒரு உதிரி என்ஜினும் அடங்கும்.
மேலும், பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், துல்லியமான வழிகாட்டல் உபகரணங்கள், மின்னணுப் போர் தரவுத்தள ஆதரவு, விமானம் மற்றும் வெடிமருந்து ஆதரவு உபகரணங்கள், உதிரி பாகங்கள், பயிற்சி உபகரணங்கள், சிமுலேட்டர்கள், மென்பொருள், தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் தளவாட ஆதரவு உள்ளிட்ட பிற பொருள்களும் அடங்கும். சவூதி அரேபியாவின் செயல்பாட்டு விமானங்களை அதிகரிக்கும். இந்த முன்மொழியப்பட்ட விற்பனை ஒப்பந்தம், பிராந்தியத்தின் ராணுவ சமநிலையை மாற்றாது என வெளியுறவுத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தை தளமாகக் கொண்ட லாக்ஹீட் மார்ட்டின் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் கனெக்டிகட்டின் ஈஸ்ட் ஹார்ட்ஃபோர்டை தளமாகக் கொண்ட பிராட் மற்றும் விட்னி மிலிட்டரி என்ஜின்ஸ் ஆகியவை முதன்மை ஒப்பந்ததாரர்களாக இருக்கும். விற்பனை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர் பிரதிநிதிகளை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்று அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
The US Department of State on Thursday approved a possible Foreign Military Sale of 48 F-35 Lightning 2 fighter aircraft and related equipment to Saudi Arabia at...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.