குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்ததாவது, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பது, அவர் ஒரு சிறந்த வழக்குரைஞர் என்பதைக் காட்டுகிறது.
மாநிலங்களவையின் செயல்திறனை மேம்படுத்த அவர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். சமூகத்துக்கு சேவை செய்ய விரும்பும் அவர், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வையும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!