இந்தியா - சீனா இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இரு நாடுகளிடையே நேரடி விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி - ஷாங்காய் இடையே நேரடி விமானம் இயக்கப்படவுள்ளது. மேலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கேற்ப மும்பை - ஷாங்காய் இடையேயும் நேரடி விமான சேவையைத் தொடங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2026 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ட்வின் அசேல் போயிங் 787-8 விமானத்தின் மூலம் வாரத்தில் 4 முறை தில்லி - ஷாங்காய் இடையே விமானம் இயக்கப்படவுள்ளது. இதில், வணிகப் பிரிவில் 18 சொகுசு மெத்தைகளுடன் சராசரி பிரிவில் 238 சொகுசு இருக்கைகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான்வெளிப் பயன்பாட்டு ஒப்பந்தம் மீண்டும் இந்தியா - சீனா இடையே தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நேரடி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. 2000 ஆண்டு அக்டோபர் முதல் சீனாவுக்கு விமானங்களை இயக்கி வந்த ஏர் இந்தியா, 2020 முதல் அதனை நிறுத்தியது.
கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோ மாகாணத்துக்கு அக்டோபர் 26 முதல் இன்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. மேலும், நவம்பர் 10 முதல் தில்லி - குவாங்சோ இடையே விமானங்களை இயக்கி வருகிறது.
தற்போது, ஏர் இந்தியாம் சீனாவுக்கு நேரடி விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. சீனாவுக்கான பயண டிக்கெட்டுகள் முன்பதிவானது, செயலி, இணையதளம், முன்பதிவு மையங்கள் என அனைத்து தளங்களிலும் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மரண தண்டனை குற்றவாளி ஹசீனாவை ஒப்படைக்க வலியுறுத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.