ராஜஸ்தான் மாநிலத்தில், அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா ட்ரோன் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் மாவட்டத்தின் ராம்கார் பகுதியில், பாகிஸ்தான் நாட்டுடனான இந்திய எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள சட்டார் மைனர் எனும் இடத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா ட்ரோன் ஒன்று உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ட்ரோன் உடைந்து கிடந்த விவசாய நிலத்துக்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக ட்ரோனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக இன்று (நவ. 20) தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவயிடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்த இந்திய விமானப் படை அதிகாரிகள், உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோனை கைப்பற்றியுள்ளனர்.
இருப்பினும், அந்த ட்ரோன் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? உடைந்ததற்கான காரணம் என்ன? ஆகிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்த என்ஐஏ! 3 பேர் மருத்துவர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.