FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக உ.பி.யின் 7 மாவட்டங்களில் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 10:22 pm IST
பாதுகாப்புப் பணியில் சஷாஸ்த்ர சீமா பல் படையினர்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் 579 கி.மீ. நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக உ.பி.யின் 7 மாவட்டங்களில் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஜூலை 26 முதல் மத ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது. மத ரீதியான கொண்டாட்டங்கள் தொடர்பாக ஏற்பட்ட தகராறால் ஹிந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே உண்டான மோதல்களில் இதுவரை 3 பேர் பலியாகினர்.

இதனால் அங்கு பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தின் சுன்சாரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை, டெராய் பிராந்தியம் வரை பரவியுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல்துறையினர் சஷாஸ்த்ர சீமா பல் படையினர் மற்றும் உளவுத்துறையினர் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகள், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பாதைகள் மற்றும் கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால், நேபாள எல்லையில் உள்ள உ.பி. மாவட்டங்களான பிலிபித், லக்கிம்பூர் கெரி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், சித்தார்த்நகர், மகாராஜ்கஞ்ச் ஆகியவை உள்பட 1,047 எல்லைக் கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகனச் சோதனைகள் மற்றும் எல்லையைக் கடக்கும் நபர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

summary

Security stepped up in 7 UP districts due to unrest in Nepal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments