FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி.: மருத்துவமனையில் கத்தியைக் காட்டி மருத்துவரிடம் பணம், மொபைல் பறிப்பு

உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் மருத்துவமனையில் மருத்துவரிடம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி....

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 7:54 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் மருத்துவமனையில் மருத்துவரிடம் கத்தியைக் காட்டி ரூ. 25,000, மொபைல் போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், புடவுனில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், சனிக்கிழமை பட்டப்பகலில் ஆயுதம் ஏந்திய இருவர் மருத்துவரிடம் இருந்து ரூ. 25,000 ரொக்கம் மற்றும் அவரது மொபைல் போனை கொள்ளையடித்துச் சென்றதாகக் போலீஸார் தெரிவித்தனர்.

சதர் கொத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருத்துவமனையின் ரத்த வங்கியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வந்த நபர்கள், மருத்துவர் விகாஸ் சர்மாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் மற்றும் போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

மருத்துவர் விகாஸ் சர்மா கூறுகையில், ரத்த வங்கியில் இருந்தபோது அங்கு வந்த இருவர் தன்னிடம் பேசத் தொடங்கினர். பின்னர் திடீரெனக் கத்தியை வெளியே எடுத்து மிரட்டி, தன்னிடமிருந்த பொருட்களைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர் என்றார்.

இதனையடுத்து மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் இச்சம்பவம் குறித்துத் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், தலைமறைவான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி ராகுல் பாண்டே தெரிவித்தார். பட்டப்பகலில் மருத்துவமனையில் மருத்துவரிடம் இருந்தே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புடவுனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Two armed men allegedly robbed a doctor of Rs 25,000 and his mobile phone at the district hospital here in broad daylight on Saturday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments