FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சீன மாஞ்சா நூலுக்கு எதிராக சமூகஊடகங்களில் பிரசாரம்: தில்லி காவல் துறை

பட்டம் விடுவதற்கு சீன மாஞ்சா நூலைப் பயன்படுத்த வேண்டாம் என தில்லி காவல் துறை சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:20 am IST
தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணா்வு படம்.
பகிர்:

பட்டம் விடுவதற்கு சீன மாஞ்சா நூலைப் பயன்படுத்த வேண்டாம் என தில்லி காவல் துறை சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் தற்போது புதிய போக்காக உருவெடுத்துள்ள ‘குச்சு-புச்சு’ உரையாடல் முறையில், தடைசெய்யப்பட்ட சீன மற்றும் பிளாஸ்டிக் மஞ்சா பயன்பாட்டிற்கு எதிரான பிரசாரத்தை தில்லி காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

அதில் வரும் சமூகஊடக செயலில் உரையாடுவது போன்று அமைந்த அந்த பிரசார படத்தில் இடம்பெற்றுள்ள முதல் உரையாடலில், ‘குச்சு புச்சு, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘முழு உற்சாகத்தோட பட்டம் விட்டுட்டு இருக்கேன்’ பதில் இடம்பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

அதற்கு மற்றொரு பதிவில், ‘அப்புறம் மாஞ்சா நூல்?’ என்ற ‘கேள்விக்கு சீன மாஞ்சா நூல்’ என்ற பதில் இடம்பெற்றிருந்தது.

இதைத்தொடா்ந்து, ‘ஐயையோ இல்ல இல்ல... சீன மாஞ்சா நூல் பறவைகளுக்கும் இருசக்கர வாகனம் ஓட்டுபவா்களுக்கும் ரொம்ப ஆபத்தானது. சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாம மின்சாரக் கம்பிகளிலும் சிக்கிக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘ஓ..., எனக்கு இப்போ புரியுது. இன்றுமுதல் நான் பாதுகாப்பான நூலை மட்டுமே பயன்படுத்துவேன்’ என்று அடுத்த பதிவில் இடம்பெற்றிருந்தது.

தில்லியில் தடைசெய்யப்பட்ட இந்த நூலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், காவல் துறையின் இந்தச் சமூக ஊடக முயற்சி அமைந்துள்ளது. பொதுப் பாதுகாப்பு குறித்த செய்திகள் எவ்வாறு சமூக ஊடகங்களின் மொழிக்கு ஏற்ப மாறி வருகின்றன என்பதையும் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை காட்டுகிறது.

அண்மையில் 1,300-க்கும் மேற்பட்ட சீன மஞ்சா சுருள்களைப் பறிமுதல் செய்தது; அதேவேளையில் மத்திய தில்லி காவல் துறையும் சுமாா் 120 சுருள்களைக் கைப்பற்றியது.

பெரும்பாலும் செயற்கை அல்லது பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டு, சொரசொரப்பான பூச்சுகள் தடவப்பட்ட சீன மஞ்சா, மக்களுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், பறவைகளுக்கு உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகரில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றில், 32 வயதுடைய நபா் ஒருவா் தொழில் விஷயமாக முண்ட்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

2023-இல் மேற்கு தில்லியின் பச்சிம் விஹாா் பகுதியில், தனது தந்தையுடன் ஸ்கூட்டரில் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்த ஏழு வயது சிறுமி ஒருவா் சீன மாஞ்சாவால் உயிரிழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments