அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: ஓணம் பண்டிகைக்கு போனஸ் இங்கல்ல கேரளத்தில்!
அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்புப் பண்டிகைக் காலப்படியை அறிவித்தது பற்றி...
2025-26 நிதியாண்டிற்கான மாநில அரசு மற்றும் பல்வேறு பிரிவினருக்கு ரூ. 4,500 வரையிலான போனஸ் மற்றும் சிறப்புப் பண்டிகைக் காலப்படியை கேரள அரசு அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, போனஸ் பெறத் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 4,500 இதில் எது குறை‘வோ அந்தத் தொகைந வழங்கப்படும்.
மார்ச் 31, 2026 அன்று 11-வது ஊதிய மாற்ற விகிதத்தின் கீழ் மொத்தம் ஊதியம் ரூ. 49,276 வரை உள்ள மாநில அரசு ஊழியர்கள், உதவிபெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு இந்த போனஸ் பொருந்தும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
போனஸ் பெற ஊழியர்கள் மார்ச் 31, 2026 அன்று பணியில் சேர்ந்திருக்க வேண்டும், 2025-26 நிதியாண்டில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.
போனஸ் பெறத் தகுதி இல்லாத ஊழியர்களுக்கு, அவர்களின் பிரிவைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் சிறப்புப் பண்டிகைக் காலப்படி வழங்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஓணம் விடுமுறைக்குப் பிறகு பணியில் சேர்ந்த அமைச்சர்கள், அவைத்தலைவர், துணை அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசுத் தலைமை கொறடா ஆகியோரின் தனிப்பட்ட பணியாளர்கள் ரூ. 3000 சிறப்புப் பண்டிகைக் காலப்படி பெறத் தகுதியுடையவர்கள்.
ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆயாக்கள், நோய்த்தணிப்புப் பராமரிப்பு செவிலியர்கள் மற்றும் பியுடிஎஸ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ. 1,450 வழங்கப்படும்.
பள்ளி ஆலோசகர்களுக்கு ரூ. 1,390-ம், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூடுதல் பணியாளர்களுக்கு ரூ. 1,350-ம் வழங்கப்படும்.
பணி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற வகையிலான ஓய்வூதியதாரர்கள் ரூ. 1,250 சிறப்புப் பண்டிகைக் காலப்படி பெறத் தகுதியுடையவர்கள். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போனஸ் அல்லது சிறப்புப் பண்டிகைக் காலப்படி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பலனை மட்டுமே பெற முடியும்.
போனஸ் மற்றும் சிறப்புப் பண்டிகைக் காலப்படி வழங்குதல் ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும். 2025-26 ஆம் ஆண்டிற்கான பலன்கள் 2027-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே பெறப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Kerala government has sanctioned a bonus of up to Rs 4,500 and special festival allowance for state government employees and various other categories for the financial year 2025-26, officials on Saturday said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.