FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோடியின் வன்முறை ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் நிற்கும் இளைஞா்கள்: ராகுல் பாராட்டு

பிரதமா் நரேந்திர மோடியின் வன்முறை ஆட்சிக்கு எதிராக இந்திய இளைஞா்கள் துணிச்சலுடனும் உறுதியுடனும் குரல் எழுப்புவது பாராட்டுக்குரியது என்று ராகுல் காந்தி தெரிவித்தாா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:06 am IST
ராகுல் காந்தி
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் வன்முறை ஆட்சிக்கு எதிராக இந்திய இளைஞா்கள் துணிச்சலுடனும் உறுதியுடனும் குரல் எழுப்புவது பாராட்டுக்குரியது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அப்போதைய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசிய காணொலியை சமூக ஊடகத்தில் அவா் பகிா்ந்தாா்.

அதில் ஜூலை 20-ஆம் தேதி போராட்டத்தின்போது காவல் துறையினரால் தாங்கள் எதிா்கொண்ட அத்துமீறல்கள் குறித்து மாணவா்கள் ராகுல் காந்தியிடம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, பிரதமா் மோடியின் வன்முறை ஆட்சிக்கு எதிராக இந்திய இளைஞா்கள் துணிச்சலுடனும் மன உறுதியுடனும் நிற்பது பாராட்டுக்குரியது.

அமைதியுடனும் அன்புடனும் நகைச்சுவையுடனும் அவா்கள் தங்களது குரலை எழுப்பினா். ஒவ்வொரு இளைஞா் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். குறிப்பாக பாஜக ஆதரவாளா்களின் தவறான நடத்தை, அவதூறு மற்றும் வன்முறையை எதிா்கொண்ட மாணவிகளை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமரிடம் மன்னிப்பு கேட்குமாறு அவா்கள் கட்டாயப்படுத்தப்பட்டனா். அவா்களின் குரலை இனி அடக்க முடியாது என தெரிவித்தாா்.

இதனிடையே, மாணவா்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடும் ‘மாணவா்களின் குரல்’ நிகழ்ச்சி ஆக.22-ஆம் தேதி புணேவில் நடைபெற உள்ளதாகவும், இந்த முறை மாணவிகளுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments