பிகார் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
பிகாரில் அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட நெரிசல் பற்றி....
பிகாரில் அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் திங்கள்கிழமை ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள பக்தர்களைக் கையாளவும், இனி எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ளனர். மின்கம்பம் சரிந்து சிலருக்கு ஷாக் அடித்ததாகவும், அதைக் கண்டு பக்தர்கள் பலரும் பதறியடித்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து துணைப் பிரிவுக் காவல் கண்காணிப்பாளர் சிவம் குமார் கூறுகையில், "லக்கிசராயில் உள்ள அசோக் தாம் கோயிலில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலியாகினர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன" என்று தெரிவித்தார்.
புனிதமான ஸ்ரவண மாதத்தில் சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்வதற்காகக் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
At least six people were killed and several others were injured in a stampede at the Ashok Dham temple in Bihar's Lakhisarai district on Monday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.