FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அடடா! நெடுஞ்சாலைகள் திறக்கப்படும் முன் சோதனை ஓட்டம் நடத்தப்படலாம்!

விரைவில் நெடுஞ்சாலைகள் திறக்கப்படும் முன் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல் பற்றி..

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:28 pm IST
லக்னௌ - கான்பூர் விரைவுச்சாலை
பகிர்:

அண்மைக் காலமாக, புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள், ஒரு சில நாள்களில் பள்ளங்கள், விரிசல்கள் ஏற்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதால் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

புதிய சாலை அல்லது மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படுவதற்கு முன்பு, முழுமையாக வாகனங்களை இயக்கி சோதனை நடத்தப்படுவதுதான் அந்த திட்டம்.

அதற்காக, சாலை அல்லது மேம்பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுவதற்கு முன்பு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு, பிறகு அதில் எந்த குறைபாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், மக்கள் பயன்பாட்டுக்கு என்றால், முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட சாலை, பாதுகாப்பு தணிக்கைகள் நிறைவு பெற்ற பிறகே, திறக்கப்படும் என்றும், அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களிலும், தில்லி - அமிருதசரஸ் - கத்ரா விரைவுச்சாலை, துவாரகா விரைவுச் சாலைகள் கட்டி முடிக்கப்பட்டதும், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்ட பிறகே, திறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், சில குறைபாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு சரி செய்யப்படும், மேற்கண்ட சாலைகளில் வடிகால் பிரச்னைகள் கண்டறியப்பட்டு திறக்கப்படும் முன் சரி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments