FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய மறுப்பு: ராகுல் காந்தி தர்னா

தில்லியில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டிருப்பது குறித்து...

ராகுல் காந்தி தர்னா - விடியோ க்ளிப்
பகிர்:

தில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கடந்த மாதம் தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஜூலை 20 ஆம் தேதியில் நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். இதனையடுத்து, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டு வீசி தாக்குதலும் நடத்தினர். மேலும், போராட்டம் நடத்தியவர்கள் மீது பெல்லட் குண்டு வீசப்பட்டதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

Advertisement

Advertisement

மாணவர்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யார் ஒப்புதல் அளித்தது என கேள்வியெழுப்பி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இந்தாண்டின் மழைக்காலக் கூட்டத்தொடர் பெரும்பாலும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், பெல்லட் குண்டு வீசப்பட்டு மாணவர் காயமடைந்த விவகாரத்தில் போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று (ஆக. 21) நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்நிலையத்தில் ராகுல் காந்தி மனு அளிக்கச் சென்றார்.

ஆனால், அவரின் மனுவை ஏற்காமல், போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய மறுக்கப்பட்டதாகக் கூறி, தில்லி காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பாக ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.

ராகுல் தர்னாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பானதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

summary

LoP Rahul Gandhi sits on dharna at Parliament Street police station, demands registration of FIR over pellet injuries during July 20 protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments