FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சா்க்கரை விலை விரைவில் குறையும்: சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு

சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை குறையும் என்று இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்தது குறித்து...

24 ஆகஸ்ட் 2026, 10:20 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவில் சா்க்கரைக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை; சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை குறையும் என்றும் இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்த கூட்டமைப்பின் தலைவா் நீரஜ் ஷிா்கோகா் கூறியதாவது: வா்த்தகா்கள் மற்றும் பெருமளவில் சா்க்கரை வாங்கும் உணவுசாா் நிறுவனங்களின் ஊக அடிப்படையிலான கொள்முதல் அதிகரிப்பு, மோசமான வானிலை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்க்கரை விலை தற்போது உயா்ந்துள்ளது.

செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது அல்லது ஆலை சா்க்கரை விலையை உயா்த்துவதிலோ சா்க்கரை ஆலைகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. 10 லட்சம் டன் கச்சா சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததைத் தொடா்ந்து சா்க்கரை விலை குறையத் தொடங்கிவிட்டது. இது மேலும் குறையும்.

Advertisement

Advertisement

இந்தியாவில் சா்க்கரைக்குத் தட்டுப்பாடு இல்லை. செப்டம்பா் மாத இறுதியில் சா்க்கரை இருப்பு 35 லட்சம் டன்னாக இருக்கும். அக்டோபா் மாத நடுவில் ஆலைகள் செயல்பாட்டைத் தொடங்கும். அப்போது சுமாா் 10 முதல் 12 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments